பெருங்களத்தூர் பேருந்து நிலையம்
பெருங்களத்தூர் பேருந்து நிலையம் மிக அவசியமானதாக கருதப்படுகிறது. மதுராந்தகம், திண்டிவனம், திருவண்ணாமலை போன்ற வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பெருங்களத்தூரில் நின்றே செல்கிறது. திரிசூலம் மற்றும் குரோம்பேட்டை சுற்றியுள்ள மக்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கோயம்பேடு பேருந்து நிலையம் போவதைவிட பெருங்களத்தூர் சென்று பஸ் ஏறிவிடலாம் என்ற எண்ணத்தில் வரும் பயணிகள் அதிகம்.
பண்டிகை நாட்களிலோ அல்லது வார விடுமுறை நாட்களிலோ பார்த்தால் பைபாஸ் முடிந்து பெருங்களத்தூர் இறங்கும் இடத்திலிருந்து பேருந்து நிலையம் வரை ரோட்டில் மக்கள் வரிசையாக நின்றியிருப்பார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக காணப்படும். இதை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலிஸ் செய்து வந்தாலும் வாகனங்களும் வந்தவண்ணம் இருக்கிறது. வண்டிக்காக வரும் மக்களும் வந்தவண்ணம் இருக்கிறார்கள். ஆகவே பண்டிகை நாட்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது.
இதுபோன்ற நாட்களில் மழை பெய்தாலும் மக்கள் ரோட்டில் தான் நிற்க வேண்டும்.அப்படியே ஒதுங்க இடம் கிடைத்தாலும் பஸ் கிடைக்குமோ, கிடைக்காதா என்ற பதட்டத்தில் ரோட்டிலேயே நின்று பஸ் ஏறுகிறார்கள். இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் பெரும் மணஉளைச்சல் அடைகின்றனர். செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையை மாற்ற அரசாங்க உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை
இப்படி மக்கள் அதிகமாக வந்து செல்லும் பேருந்து நிலையம் ரோட்டில் இருப்பது தான் கொடுமை என்றாலும் அதைவிட மிககொடுமையானது கழிவறை வசதி கிடையாது. தூய்மை இந்தியா என்று வார்த்தையால் சொல்வதைவிட செய்து காட்டினால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள்.
அரசாங்க பேருந்துகள் ஒருபுரம் வந்து செல்ல, மற்றொரு புரம் தனியார் பேருந்துகளின் அட்டகாசங்கள் அதிகமாக உள்ளன. மெயின் ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு பயணத்திற்கான ஆட்களை தேடுவார்கள். வண்டியை யார் எடுக்க சொன்னாலும் அதை காதிலே வாங்கமாட்டார்கள். தன் வேலை முடிந்த பிறகே வண்டியை எடுப்பார்கள். பெருங்களத்தூர் பேருந்து நிலைய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.