தாம்பரம் இரயில்வே நிலையத்திலிருந்து இறங்கிய மிஸ் குருவி படிக்கட்டில் மெல்ல மெல்ல ஏறத் தொடங்கியவுடன், ஒருவன் இடித்துவிட்டு வேகமாக செல்கிறான். யார் அவன்? என்ன அவசரம். வேகமாக படியில் ஏறி அவனை ஊற்று நோக்கினாள். அவன் கழிவறைக்குள் சென்றான். வெளியே வந்தவுடன் சிறுநீர் கழிவறை கட்டணம் 5 ரூபாய் என்றதும் சண்டையில் இறங்கி விட்டான். இதைப்பார்த்து சிரித்தப்படியே வெளியேற இரயில் நிலைய வாயிலில் ஒரு காதல் ஜோடி ஒருவரைவொருவர் அனைத்தப்படியே வழிவிடாமல் செல்கிறார்கள். இந்நிகழ்வை பார்த்து தன் தலைமுடியை கொதிவிட்டு தன் தங்கைக்கு துணி எடுக்க தாம்பரம் மார்கெட்டுக்குள் நுழைந்தாள்.
சண்முகம் தெருவில் அமைந்துள்ள ஒரு கடைக்கு உள்ளே செல்லலாம் என்றால் 4 பக்கமும் இரண்டு சக்கர வாகனங்கள் ஒலிபெருக்கி அடித்து கொண்டு நகர்ந்து செல்கின்றன. ஏன் இவ்வளவு போக்குவரத்து நெரிசல் என்றால் வண்டி செல்லும் ரோட்டில் தன் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களின் வண்டியை நிறுத்தி வைத்துள்ளார்கள். இங்குள்ள எந்த கடைக்கும் பார்க்கிங் வசதி கிடையாது. தாம்பரம் மார்கெட்டுக்கு வந்து பொருட்களை வாங்கி திரும்பி செல்வதற்குள் பாடாதபாடுபடுகின்றனர் பொதுமக்கள். இதற்கு தாம்பரம் நகராட்சி அலுவலகமே பதில் சொல்ல வேண்டும். இந்த போக்குவரத்து நெரிசலை பார்த்து பயந்து துணி வாங்காமலே மார்கெட்டை விட்டு வெளியேறினாள் மிஸ்குருவி.
மெயின் ரோட்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநரிடம் பெருங்களத்தூர் செல்ல எவ்வளவு என்றால்? 120 ரூபாய் என்றதும், ஆட்டோ தேவையில்லை ஷேர் ஆட்டோவில் செல்லலாம் என்று போனால் உட்காருவதற்கே இடமில்லை. அடுத்த ஸ்டாப்பிங்கிற்கு 20 ரூபாய். என்னவென்று விசாரித்தால் போக்குவரத்து நெரிசலான நேரத்தில் கட்டணம் உயர்த்தி வாங்கப்படுகிறது.
சரி பஸ்சிலே பயணம் செய்யலாம் என்று திரும்பியபோது டமால் சத்தம் மிஸ் குருவி பயந்தே விட்டாள். தாம்பரம் பேருந்து நிலைய மெயின் ரோட்டில் கண்ணாபின்னாவென்று பஸ்களை நிறுத்திவிட்டு, பின்னால் வந்த இரு சக்கர வாகனத்தை இடித்து விட்டார்கள். உடனே கூட்டம் சேர்ந்துவிட்டது. கூட்டத்தை விலகி சென்று பார்த்தால் வாகனம் ஓட்டி வந்தவருக்கு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். வாகனங்கள் இயக்குவதில் ஏன் இவ்வளவு கவனகுறைவு£க செயல்படுகிறார்கள் என்று பெருமூச்சி விட்டு பேருந்து நிலையத்திற்கு நுழைந்தாள்.
பேருந்து நிலைய இருட்டில் ஒதுக்குப்புரத்தில் இருவர் மது அருந்துவதும், அதன் அருகிலே ஒருவன் சிறுநீர் கழிப்பதும் மேலும் உச்சக்கட்டமாக ஒருவன் பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் மத்தியில் புகைப்பிடித்தலும் பார்த்து முகம் சுளித்த மிஸ் குருவி பேருந்து வந்ததும் உடனே அவ்விடத்தை காலி செய்தாள். இதே எண்ணத்தில் பேருந்தில் நுழைந்தவுடன் நடத்துனர் டிக்கட், டிக்கட் சத்தம் கேட்டதும் தன் சுயநிலைக்கு திரும்பினாள். தன் பையிலிருந்து 10 ரூபாய் எடுத்து கொடுத்ததும் நடத்துனர் ஏற இறங்க பார்த்துவிட்டு பஸ் கட்டணம் விலை உயர்ந்தது தெரியாதா என்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில நடத்துனர்கள் பொதுமக்களிடையே அவதூறாக பேசுவது, சில்லரை இல்லை என்றால் முகத்தை காட்டுவது கண்டிக்கதக்கது. மேலும் சில்லரை கொடுத்து டிக்கட்டை வாங்கி பையில் வைத்தாள். மாத சம்பளம் உயரவில்லை. மற்றவையெல்லாம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இப்படி சென்றால் மக்கள் நிலை என்ன ஆகுமோ--? யோசனையில் பேருந்தில் உள்ளே பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி அடைந்தாள்.
பக்கத்தில் யார் அமர்ந்து இருக்கிறார்கள் என்று தெரியாமல் செல்போனில் ஆழ்ந்திருக்கிறார்கள். பைத்தியம் பிடித்தவர்கள் கூட தன்நிலை மறந்து குழந்தைகளாக பலருடன் விளையாடி கொண்டு இருக்கும் நிலையில், இவர்கள் செல் மோகத்தினால் இயல்பாக மற்றவரிடம் பேசுவதையே மறந்து விட்டார்கள். ஒரு காலகட்டத்தில் இவர்களிடம் செல்போன் இல்லையெனில் ஒரு விதமான பையத்தியகாரர்களாக மாறிவிடுவார்களோ என்ற சிந்தனையின் உச்சியில் இருந்தபோது மிஸ் குருவி ஸ்டாப்பிங் வந்தததும் இறங்கி விட்டாள்.